Skip to main content

Posts

Showing posts from March, 2026

ஒரு நாள் பார்வை

ஒரு ஊர்ல ஒரு ராஜா  என தொடங்கும் கதைகள் ஒருவனின் ஆழ்ந்த உறக்கத்தை  சுலபமாக பறித்து சென்றது. சிறு தூரம் நடந்தவன் மரத்தின் நிழலில் உறங்கினான் உடைந்த கண்ணாடி பகுதிகளும்  மண்புழுக்களும் காவல் காத்தன. மறையும் சூரியனின் கீழ் குயிலின் குரல் கூட தாலாட்டு இவையெல்லாம் தாண்டி அவன் விழித்தால் அந்த கற்பனை ராஜாவை பார்க்க ஒரு நாள் பார்வை கிடைக்குமா? -  அருண் குமார் முத்தழகன் எனது ஆங்கில கவிதை படைப்புகளுக்கு கீழே உள்ள இணையதளத்தைப் பார்வையிடவும்  -  ஏகே கவிதைகள்