Skip to main content

என் பார்வையில் கலாம்

 

கடல் சூழ்ந்த நிலத்தில்

சொந்தம் சூழ வளர்ந்து

புகழ் சூழ இறைவனை

அடைந்த மாமனிதரின் கதை


சிறுவனாக பல நேரம் 

அனைவரும் சமம் என்று

தோழர்கள் ‌முதல் ஆசிரியர்கள் வரை

மனிதனாக உயர்ந்து நின்றார்.


வளரும் காலத்தில் விற்ற

செய்தித்தாள்களில் தன் 

வெற்றிகளையும் செய்திகளாக

மாற்றி ஊக்கம் அளித்தார்.


இயற்பியல் மாணவராக 

விமானங்கள் மீதான ஆசையில்

நூலிழையில் வீழ்ந்த பின்னும் 

இராணுவ ஹெலிகாப்டரை உருவாக்கினார்.


செயற்கைக்கோள் தொடங்கி

பொக்ரான் சோதனை வரை 

இந்தியாவை உலகளவில்

வல்லரசாக மாற்ற உழைத்தார்


விருதுகள் குவிந்த வண்ணம்

ஒருமனதாக மக்களின் 

குடியரசுத் தலைவராக

நேர்மையாக இருந்தார்.


தூக்கம் இல்லாமல் கனவு, 

தற்செயல் இல்லாமல் திறமை, 

கையொப்பம் இல்லாமல் ஆட்டோகிராப்‌, 

இறப்பு இல்லாமல் சரித்திரம் போல


வாக்கியங்கள் பொன் மொழிகளாய்

மாற முடியும் என்ற நம்பிக்கையில் வரும் 

வாக்கியங்களில் கவிதையாய் வாழ்கிறார்

என் பார்வையில் கலாம் 


-  அருண் குமார் முத்தழகன்


எனது ஆங்கில கவிதை படைப்புகளுக்கு கீழே உள்ள இணையதளத்தைப் பார்வையிடவும் 

ஏகே கவிதைகள்


Comments

Popular posts from this blog

கொட்டு முரசே

சுதந்திரக் காற்று வீசும் நாட்டின் கல்லூரியில் படிக்கும் மாணவன் வளமான தேசத்தைப் பற்றி எழுதுவது சுவரொட்டிகள் அலங்கரித்த பேருந்துகள் பராமரிப்புக்கு ஏங்கும் உயிர்கள் சத்தம் நிறைந்த வீடுகள் என ஆயிரம் குறைகள் கண்களோடு இருட்டில் வாழும் கிராமத்து வயலின் விவசாயிகள் வேலை தேடும் திறமைசாலிகள்  என அப்பாற்பட்ட மனிதர்கள் ஆனால் இந்தியன் என்ற உணர்வு  அனைவரையும் ஒன்றாக மாற்றுகிறது தேசிய கொடியை மேலும் உயர்த்திய இந்த நாட்டின் அடையாளங்களுக்காகவும் எல்லைகளை குடும்பங்களின் நினைவோடு காத்து இறந்த பின்னரும் தனது குடும்பம் தன் மக்களைக் காக்கும் என்ற புனிதர்களுக்காகவும்  முரசே நீ கொட்டுவாயா??? -  அருண் குமார் முத்தழகன் (என் கல்லூரியில் போட்டிக்காக நான் எழுதிய கவிதை இது.  கவிதையின் முதல் பகுதி தேசியக் கொடியின் மூவர்ணத்தைக் குறிக்கும் மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது.  மேலும் கவிதையின் இரண்டாம் பாகம் வீழ்ச்சியடைந்த அமைப்பு கொண்டது. அந்த பகுதியில் எழுதப்பட்ட பிழைகள் குறைவதை உறுதி செய்வதே அதற்கான காரணம். கவிதையின் மூன்றாம் பகுதி அனைவரும் சமம் என்பதைக் குறிக்கிறது.) எனது ஆங்கில க...