ஒரு ஊர்ல ஒரு ராஜா என தொடங்கும் கதைகள் ஒருவனின் ஆழ்ந்த உறக்கத்தை சுலபமாக பறித்து சென்றது. சிறு தூரம் நடந்தவன் மரத்தின் நிழலில் உறங்கினான் உடைந்த கண்ணாடி பகுதிகளும் மண்புழுக்களும் காவல் காத்தன. மறையும் சூரியனின் கீழ் குயிலின் குரல் கூட தாலாட்டு இவையெல்லாம் தாண்டி அவன் விழித்தால் அந்த கற்பனை ராஜாவை பார்க்க ஒரு நாள் பார்வை கிடைக்குமா? - அருண் குமார் முத்தழகன் எனது ஆங்கில கவிதை படைப்புகளுக்கு கீழே உள்ள இணையதளத்தைப் பார்வையிடவும் - ஏகே கவிதைகள்
சுதந்திரக் காற்று வீசும் நாட்டின் கல்லூரியில் படிக்கும் மாணவன் வளமான தேசத்தைப் பற்றி எழுதுவது சுவரொட்டிகள் அலங்கரித்த பேருந்துகள் பராமரிப்புக்கு ஏங்கும் உயிர்கள் சத்தம் நிறைந்த வீடுகள் என ஆயிரம் குறைகள் கண்களோடு இருட்டில் வாழும் கிராமத்து வயலின் விவசாயிகள் வேலை தேடும் திறமைசாலிகள் என அப்பாற்பட்ட மனிதர்கள் ஆனால் இந்தியன் என்ற உணர்வு அனைவரையும் ஒன்றாக மாற்றுகிறது தேசிய கொடியை மேலும் உயர்த்திய இந்த நாட்டின் அடையாளங்களுக்காகவும் எல்லைகளை குடும்பங்களின் நினைவோடு காத்து இறந்த பின்னரும் தனது குடும்பம் தன் மக்களைக் காக்கும் என்ற புனிதர்களுக்காகவும் முரசே நீ கொட்டுவாயா??? - அருண் குமார் முத்தழகன் (என் கல்லூரியில் போட்டிக்காக நான் எழுதிய கவிதை இது. கவிதையின் முதல் பகுதி தேசியக் கொடியின் மூவர்ணத்தைக் குறிக்கும் மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது. மேலும் கவிதையின் இரண்டாம் பாகம் வீழ்ச்சியடைந்த அமைப்பு கொண்டது. அந்த பகுதியில் எழுதப்பட்ட பிழைகள் குறைவதை உறுதி செய்வதே அதற்கான காரணம். கவிதையின் மூன்றாம் பகுதி அனைவரும் சமம் என்பதைக் குறிக்கிறது.) எனது ஆங்கில க...